நம்ம யாத்ரி... கமிஷன் இல்லாமல் கோடி வருவாய் - சென்னையில் கலக்கும் ஆட்டோ செயலி

Namma Yatri App: டாக்சி ஓட்டுனருக்கு கமிஷன் இல்லா 'நம்ம யாத்ரி' செயலி.., ஓட்டுநர்கள் கமிஷன் இல்லாமல் ₹550 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அச்செயலி தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 2, 2024, 07:36 PM IST
  • இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
  • சென்னையில் நம்ம யாத்ரி 2.7 லட்சம் பயணங்களை அடைந்தது.
  • சென்னையில் நம்ம யாத்ரி ரூ.4 கோடி ஈட்டியுள்ளது.
நம்ம யாத்ரி... கமிஷன் இல்லாமல் கோடி வருவாய் - சென்னையில் கலக்கும் ஆட்டோ செயலி title=

Namma Yatri App: சென்னையில் பல்வேறு தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பயனங்களுக்கு கால் டாக்சி வைத்திருக்கும் ஓட்டுநரிடம் நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொள்கிறது. இந்த கமிஷன் தொகை தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் செயல்படும் பல்வேறு கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்கள் ஒன்றிணைந்து 'நம்ம யாத்ரி' எனும் செயலி மூலம் ஒன்றிணைக்கப்பட்டு ஓட்டுனருக்கு கமிஷன் இல்லாமலும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இயங்கும் இச்செயலியை சிஐடியு பொதுச்செயலாளர்  குப்புசாமி, கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

சென்னையில் 15,000 வாகன ஓட்டுனர்கள் இணைத்துள்ள நம்ம யாத்ரி செயலியில் 3 மாதங்களில் 50000 பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற செயலிகள் போல் அல்லாமல் நம்ம யாத்ரி செயலியில் கட்டணம் நேரடியாக ஒட்டுனர்களை சென்றடைவதால் வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேவை கிடைக்கிறது.

மேலும் படிக்க | TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?

விரைவான முன்பதிவுகள், குறைவான ரத்து கட்டணம்,  உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் நிறைவான சேவை வழங்குகிறது இந்த செயலி. மேலும் ஓட்டுனர்கள் முன் வைக்கக்கூடிய  குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்திய முதல் செயலியாக திகழ்கிறது. எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட வாழ்வாதார சிக்கல்கள் ஏற்படும்போது நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்து ஓட்டுனர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் செயலி செயல்படும்.

முதன்முறையாக, சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கேப் மற்றும் டாக்சி தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி இந்த வெளியீட்டுக்கு ஆதரவளித்துள்ளன. இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். நம்ம யாத்ரி செயலியின் இந்த அறிமுக விழாவில் சி ஐ டி யு பொதுச் செயலாளர் குப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உரிமைக்குரல் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜாகிர் உசேன், உரிமை கரங்கள் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெற்றிவேல்,  ஆல் டிரைவர் யூனியன் ரைட் அசோசியேஷன் பொதுச்செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த ஜாஹிர் ஹுசைன் உரையாற்றும்போது "நம்ம யாத்ரி செயலியில் சென்னையில் வாகனங்களை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி என்றும், ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக நிற்பதாகவும்" தெரிவித்தார். 

நம்ம யாத்ரியைச் சேர்ந்த ஷான் எம்.எஸ் தெரிவிக்கையில் "நம்ம யாத்ரி என்பது வெறும் செயலி அல்ல என்றும் இது சென்னையின்பெருமை மற்றும் மக்களுக்கான முதல் இயக்கம் என்றும் கூறினார். ஒரு வெளிப்படையான மற்றும் நியாயமான செயலியாக ஒரு இணக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார். 
 
ONDC ஐச் சேர்ந்த பாலாஜி  நம்ம யாத்ரி ONDC இன் பணிக்கு ஒரு சான்று என்றார். சென்னை ஓட்டுநர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முழு ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 
நம்ம யாத்ரி,  62 லட்சம் வாடிக்கையாளர்களையும், 3.3 லட்சம் ஓட்டுநர்களையும் கொண்டுள்ளது. இதுவரை
3.6 கோடி பயணங்களை முடித்து, ஓட்டுநர்கள் கமிஷன் இல்லாமல் ₹550 கோடி வருவாய் ஈட்ட ஓட்டுநர்களுக்கு உதவியுள்ளது.

இந்த பிப்ரவரியில் சென்னையில் ஆட்டோ சேவையை துவக்கி, 2.7 லட்சம் பயணங்களை அடைந்து, ரூ.4 கோடி ஈட்டியுள்ளது. சென்னையில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்தை நோக்கி நம்ம யாத்ரி தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

மேலும் படிக்க | பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News