NEET Exam: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

நீட் தேர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2021, 10:48 AM IST
NEET Exam: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிப்பு title=

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனர்  உள்படோர் அடங்கிய குழு ஒன்றை அரசு அமைத்தது.

அதன்படி, அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து வந்தனர். இதுதவிர பொது மக்களிடம் இருந்தும் நீட் தேர்வின் (NEET Exam) தாக்கம் தொடர்பான கருத்துகளை கேட்டு பெற்றனர். அதன்படி, சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர். 

ALSO READ | Good News on NEET 2021: நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு

இதனிடையே அந்த குழுவினை அமைத்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த குழுவுக்கு எதிரான வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர், 165 பக்கங்கள் தயாரித்து வைத்து இருக்கும் அறிக்கையை இன்று (புதன்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்.

ALSO READ | NEET UG 2021 தேதி விரைவில் வெளியீடு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News