அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இது ஒரிசா அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு அரபிக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், ஆகஸ்ட் 9ம் தேதி வரை வங்கக்கடலுக்கும், ஆகஸ்ட் 12ம் தேதி வரை அரபிக்கடலுக்கும் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
என கூறினார்.