"வருகிறது நிவர் புயல்...!!!" என்ன செய்ய வேண்டும்? , செய்யக்கூடாது?...

 'நிவர்' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து 15 அம்ச அறிவுறுத்தல்கள் ஒரு பார்வை. 

Last Updated : Nov 23, 2020, 12:16 PM IST
    1. 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது
    2. ஞாயிற்றுக்கிழமை, IMD, தென்மேற்கு அரேபிய கடல் மீது மையம் கொண்டிருந்த மிகக் கடுமையான சூறாவளி புயல் மேற்கு நோக்கி நகர்ந்ததாகக் கூறியது.
    3. நவம்பர் 25 பிற்பகலுக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது
"வருகிறது நிவர் புயல்...!!!" என்ன செய்ய வேண்டும்? , செய்யக்கூடாது?... title=

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் ஒரு சூறாவளி புயல் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) திங்களன்று தெரிவித்துள்ளது.

"தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைந்து தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 25 பிற்பகலுக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னையின் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

 

 

ALSO READ | தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை: 24, 25 தேதிகளில் அதிகனமழையுடன் வரும் நிவர் புயல்

 

ஞாயிற்றுக்கிழமை, IMD, தென்மேற்கு அரேபிய கடல் மீது மையம் கொண்டிருந்த மிகக் கடுமையான சூறாவளி புயல் மேற்கு நோக்கி நகர்ந்ததாகக் கூறியது.

"தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிர காற்றழுத்தம் தொடர்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேலும் அழுத்தத்தைக் கூட்டி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது" என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

 

புயலை எதிர்பார்த்து, அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டங்களில் சூறாவளிக்கு முந்தைய கண்காணிப்பு மற்றும் அதிக மழை எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 'நிவர்' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தல்கள் ஒரு பார்வை. 

  • ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும். அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்
  • புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
  • கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.
  • தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
  • நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்கு கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.
  • சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.
  • நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.
  • குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும். 
  • மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மின்வயர் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.
  • அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.  மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.
  • பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.

 

ALSO READ | அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News