உள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 8, 2019, 12:22 PM IST
உள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 16ம் தேதி ஆகும். இதையடுத்து 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற வரும் 19ம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. அதனால் ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ தேர்தலில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடியைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

என்றும் ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

More Stories

Trending News