இனி அரசியலில் தளபதி மு.க.ஸ்டாலினா? விஜய்யா? கொழுந்துவிட்டு எரியும் விவாதம்! முழு விவரம்!

சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Aug 22, 2024, 03:50 PM IST
  • 2026 தேர்தல் களத்தில் நிச்சயம் பல சுவாரஸ்ய மோதல்கள் நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
  • தோனிக்கும் அஜித்துக்கும் இடையே தல என்ற பெயருக்காக ரசிகர்கள் அடித்துக்கொண்டனர்.
இனி அரசியலில் தளபதி மு.க.ஸ்டாலினா? விஜய்யா? கொழுந்துவிட்டு எரியும் விவாதம்! முழு விவரம்! title=

தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தை மும்முரமாக தொடங்கியுள்ளார். சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

நாளைய தீர்ப்பு மூலம் சினிமாவில் நாயகனாக உதயமான விஜய் இன்று 2026-ம் ஆண்டு மக்களின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த முகமெல்லாம் ஹீரோவா என ஏளனம் பேசிய மீடியாக்கள், அவர் குறித்த செய்திகளை தேடித்தேடி போடும் அளவுக்கு அசுர வளர்ச்சியை சினிமாவில் எட்டிய விஜய், அரசியலில் அதே குஷுயுடன் குதித்துள்ளார். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகனாக இருக்கும் விஜய்க்கு, கேரளா, ஆந்திராவிலும் ரசிகர்கள் அதிகம். அதோடு வெளிநாடுகளிலும் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ள இவர், வசூல் மன்னனாக வலம் வருகிறார்.

மேலும் படிக்க | வெளியானது தவெக கட்சியின் ஒரிஜினல் கொடி...? விஜயே வந்து ஒத்திகை பார்த்த சம்பவம்!

ஆரம்பத்தில் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திய இவருக்கு, சில மோசமான அனுபவங்கள் அரசியலுக்கு வரும் எண்ணத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. விஜய் படம் என்றாலே அதனை சர்ச்சையாக்கி, படத்தை வெளியிட பல தடைகளை உருவாக்கி ஒவ்வொரு முறையும் போராடி தனது படங்களை வெளியிட்டு வந்தார். அதிலும் தலைவா படத்தில் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்த, அந்த படம் வெளியாவதில் இருந்த சிக்கல் விஜய்க்கு பேரிடியாக அமைந்தது. ஆனாலும் ரஜினி சொன்ன கதை போல, விழுந்தால் எழாமல் இருக்க நான் யானை இல்லை, விழுந்ததும் எழும் குதிரை என நிரூபித்து அடுத்தடுத்து பல ஹிட்டுகளை கொடுத்தார். என்ன பிரச்சனை என்றாலும், தனது ரசிகர்கள் மீதான நம்பிக்கையால் துணிந்து அனைத்தையும் சந்தித்தார். விஜய் ஆடியோ லாஞ்ச் என்றாலே என்ன பேசப்போகிறார் என்ற ஆர்வத்தை தனது எதிரிகளிடம் கூட ஏற்படுத்திய பெருமை விஜய்க்கே உள்ளது. 

சைலண்ட்டாக தனது வளர்ச்சி மூலமும், படங்களின் வசூல் மூலமும் பேசி வந்த விஜய், திடீரென கட்சியை ஆரம்பித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். அதிலும் பல சிக்கல்கள் வந்தன. TVK என்றால் தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும், கட்சியின் பெயரில் எழுத்துப்பிழை உள்ளது என்றும் ஏராளமான விமர்சனங்கள் அடுத்தடுத்து வண்டி கட்டின. ஆனாலும் அசராத தளபதி, தவறை திருத்திக்கொள்வேன் என்ற பாணியில், கட்சியின் பெயரில் இருந்த எழுத்துப்பிழையை மாற்றினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தின் போது, நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தனது அரசியல் வருகையை அடுத்து, சினிமாவுக்கு குட்பை சொல்லப்போவதாக அவர் சொன்ன வார்த்தைகள் ரசிகர்களின் நெஞ்சை முள்ளாய் தைத்தது. அதனால் என்ன, அரசியல் மூலம் மக்களுடன் நேரடித்தொடர்பில் இருப்பேன் என, தனது நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறினார் விஜய்.

விஜய் அரசியல் பயணத்தை பல்வேறு கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனங்களை பெரிது படுத்தாத அவர், இன்று வெற்றிகரமாக தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவிட்டார். கட்சி மாநாடு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் ரசிகர்களும் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவில்லை, ஒரு இளைஞர் அரசியலுக்கு வருவதை திமுக அரசு தடுக்கிறது, தமிழகத்தில் திமுக-வை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது என நினைக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் திமுக அரசு அனுமதி மறுக்கிறது என செல்லூர் ராஜூ காட்டமாக பேட்டியளித்து, திமுகவுக்கும் விஜய்க்கும் இடையெ பகை உள்ளது போல கொளுத்திப் போட்டது இப்போது கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

தோனிக்கும் அஜித்துக்கும் இடையே தல என்ற பெயருக்காக ரசிகர்கள் அடித்துக்கொண்டனர். உடனே அஜித் இனி என்னை தல என அழைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டார். இப்போது அதே சூழலில் விஜய்யும் மு.க.ஸ்டாலினும் வந்து நிற்கின்றனர். இதுவரை தளபது என்றால் அரசியலில் மு.க.ஸ்டாலினும், சினிமாவில் விஜய்யும் இருந்தனர். இனி அரசியலில் தான் இருவரும் களம் காண்பார்கள் என்பதால், கட்சி போஸ்டர்களில் தளபதி என திமுகவினர் பயன்படுத்துவதா? இல்லை தமிழக வெற்றிக்கழகத்தினர் பயன்படுத்துவதா என நெட்டிசன்கள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர். 

இதனால் திமுகவுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சோஷியல் மீடியாவில் மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை விஜய் எப்படி கையாளப்போகிறார்? தனது ரசிகர்களுக்கு அமைதி காக்கும் படி அன்புக் கட்டளை இடுவாரா? இல்லை மு.க.ஸ்டாலின் இந்த மோதல் போக்கை கண்டிப்பாரா என்பதை எல்லாம் பொருந்திருந்து பார்க்கலாம். 2026 தேர்தல் களத்தில் நிச்சயம் பல சுவாரஸ்ய மோதல்கள் நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மேலும் படிக்க | இதுதான் கொடியா? வேறு இருக்கா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News