சாலையை கடக்கும் யானை கூட்டம்! அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகள்.  

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2022, 12:05 PM IST
  • சாலையை கடக்கும் யானை கூட்டம்.
  • அலறி அடித்து ஓடிய மக்கள்.
  • வைரலாகும் வீடியோ.
சாலையை கடக்கும் யானை கூட்டம்! அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்! title=

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் யானைகள் சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் சிலர் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க சென்றவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைக் கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.

மேலும் படிக்க | சிரிப்ப அடக்க முடியாது: நக்கல் சிங்கத்தின் நையாண்டி வேலை, வைரல் வீடியோ

இந்நிலையில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடக்க செய்கின்றன.  இந்நிலையில் இரண்டு குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற யானைக்கூட்டத்தை பார்த்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலைதெறிக்க வாகனத்தை திருப்பி ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.

அதில் ஒரு சில பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் நோக்கத்தில் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுக்க முயற்சி  செய்தனர்.  எனவே வன விலங்குகளை இடையூறு செய்யும் பொதுமக்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க | பிரதர்னு கூப்புடாதிங்க - மனசே வலிக்குது; நஸ்ரியாக்களை எச்சரிக்கும் ஊபர் ஓட்டுநர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News