பெண் குழந்தைகளை பாதுகாத்தல் குறித்த ஒருநாள் கருத்தரங்கம்...

பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கினை புதுவை முதல்வர் நாராயணசாமி துவங்கிவைத்தார்!

Last Updated : Jan 29, 2019, 03:35 PM IST
பெண் குழந்தைகளை பாதுகாத்தல் குறித்த ஒருநாள் கருத்தரங்கம்... title=

பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கினை புதுவை முதல்வர் நாராயணசாமி துவங்கிவைத்தார்!

புதுச்சேரி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், Beti Bachavo - Beti Badhavo திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த பயிற்சி முகாமை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியல் பேசிய அவர் வட மாநிலங்களில் பெண்களுக்கு தனி சுதந்திரம் இல்லாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

மேலும் சுதந்திர இந்தியாவில் இது போன்றதொரு நிலை மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் பெண்களுக்கு அதிகளவு பாதுகாப்பு உள்ளது என்றும், பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளதாவும் தெரிவித்தார். 

Trending News