Petrol Price: சென்னையில் ரூ.105-ஐ கடந்தது பெட்ரோல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து 105 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 101 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2021, 11:17 AM IST
Petrol Price: சென்னையில் ரூ.105-ஐ கடந்தது பெட்ரோல் விலை title=

Petrol, Diesel Price Today: கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து 105 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 101 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடந்து ஆறாவது நாளாக, டீசல் விலை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது.

கொரோனா (Corona) பாதிப்புக்குப் பிறகு, தற்போது மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், பெட்ரோல் டீசலுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த தேவை அதிகரித்து வந்தாலும், பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதன் விளைவாக பெட்ரோலிய நிறுவனங்கள் tஹொடர்ந்து எரிபொருட்களின் விலையை அதிகரித்து வருகின்றன. 

இது தவிர, மத்திய மாநில அரசுகளால் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளும் அதிகமாக உள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி டீசல் விலையும் பல இடங்களில் ரூ.100-ஐ கடந்து விற்பனையில் உள்ளது. 

ALSO READ:இல்லத்தரசிகள் தலையில் இடி, சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறதா? 

தேசிய அளவில் பார்க்கும்போது, அரசுக்கு சொந்தமான எரிபொருள் (Fuel) சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வகையில் லிட்டருக்கு ரூ.108.29 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ.114.14 ஆகவும் உயர்ந்துள்ளது.

மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.105.12 ஆகவும், டெல்லியில் ரூ.97.02 ஆகவும் உள்ளது.

கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.108.78-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.100.14-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு முக்கிய பங்குண்டு. அந்த வகையில், விலைவாசி அதிகரிப்புக்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலையிலும் தொடர்ந்து ஏற்றம் இருப்பதால், மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ALSO READ:LPG CNG Prices Hike: உயர்கிறது CNG மற்றும் PNG விலை; வெளியான அதிர்ச்சித் தகவல்  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News