உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, விரைவில் நலம்பெற வேண்டுவதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்றி இரவு உடல்குறைவு காரணத்தால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலத்துடன் உள்ளதாக, மருத்துவமனை தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அன்னை சக்தியின் அருளால் அவர் விரைவில் குணமடைந்து அரசியல் பணியை தொடர்ந்திட பிரார்த்திக்கின்றேன்.(2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 16, 2016