இலங்கையின் பிரபல பாப் இசை பாடகர் சிலோன் மனோகர். இவர் 1960-ல் பெயிலா என்று அழைக்கப்பட்ட இலங்கை நாட்டுப்புறப்பாடல்களை, பாப் இசையோடு கலந்து புதிய இசை வடிவத்தை உருவாக்கியவர். இலங்கையில் பிறந்த அவர், சுராங்கனி என்கிற தமிழ் பாப் பாடலை பாடியதன் மூலம் உலகமெங்கும் பிரபலமானார்.
பின்னர் சென்னை வந்த மனோகர், சினிமாவில் நடிக்க தொடங்கினார். 1980-ல் சிவாஜிகணேசன், கமல்ஹாசன், சிரஞ்சிவி உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அத்திப்பூக்கள், திருமதி செல்வம், அஞ்சலி உள்ளிட்ட நெடுந்தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த சிலோன் மனோகர் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.