நெடுவாசலில் தொடர் போராட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

Last Updated : Feb 26, 2017, 10:03 AM IST
நெடுவாசலில் தொடர் போராட்டம்!! title=

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14-ம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நெடுவாசலில் 6 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதாகவும், அவை எதற்கு என்பது தற்போதுதான் புரிகிறது என்று மக்கள் தெரிவித்தார். விவசாய பூமி பயிர்கள் நன்கு செழித்து வளரும் விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறி அப்பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பும் போராட்டக் களத்தில் உள்ளன. 

கடந்த 10 தினங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று உண்ணாவிரத்ததைத் தொடங்கினார். மேலும் திட்டம் முழுமையாக கைவிடப்படும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பேரழிவு ஏற்படும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மனிதகுலத்துக்கு பேரழிவு நிச்சயம் ஏற்படும் என்றும் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை அழிக்கக் கூடாது என்றும் மக்கள் போராடி வருகின்றனர். 

Trending News