உலகப் புகழ் பெற்ற ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன், அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி, அங்கு பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயிலை கட்டினார். அவர் கங்கை கொண்ட சோழன் என பெயர் பெற்றார். இவர் ஆடி மாதம் திருவாதிரை அன்று பிறந்தார்.
ராஜேந்திர சோழனை (Rajendra Chola) கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஆடி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் பிரகதீஸ்வரர் கோயிலில் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ALSO READ | 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு தமிழக அரசு மரியாதை செய்துள்ளது. அதன்படி, வரும் ஆண்டு முதல் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாக கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ALSO READ | வாடிய மக்கள் இனி வாழ்க்கையில் முன்னேறட்டும்: மருத்துவர் இராமதாசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR