பாஜக மாநில செயலாளர் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், பாஜக மாநில செயலாளர் வினோஜ் சகோதரர் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 21, 2024, 07:21 PM IST
  • பாஜக மாநில செயலாளர் இல்லத்திருமண விழாவில் ரஜினி
  • வினோஜ்.பி சகோதரருக்கு திருமணம்
  • புகைப்படம் வைரலாகி வருகிறது
பாஜக மாநில செயலாளர் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

பாஜக கட்சியின் மாநில செயலாளர் வினோஜ்.பியின் சகோதரருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

பாஜக மாநில செயலாளர் இல்லத்திருமணம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் விழாக்கள் எதிலும் பெரிதாக தலை காட்டாமல் இருக்கிறார். இந்த நிலையில், தற்போது பாஜக மாநில செயலாளர் வினோஜ்ஜின் சகோதரருக்கு திருமணம் நடந்தது. அதில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

கூட்டத்தை கூட்டிய வினோஜ் - தட்டிக் கொடுத்த நட்டா - மகிழ்ச்சியில் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாத யாத்திரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையின் கிடுக்குப்பிடி கட்டுப்பாடுகளையும் மீறி மக்கள் கூட்டத்தை சேர்த்து ஜே.பி.நட்டாவிடம் பாராட்டு வாங்கியிருக்கிறார் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம்.

தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தங்கசாலையில் அண்ணாமலையின் நடைபயணம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்துறையில் மனு வினோஜ் மனு அளித்த நிலையில், நடைபயணத்திற்கு அனுமதி மறுத்தது காவல்துறை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மேடை அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும், நாற்காலிகள் போடும் இடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, பொதுகூட்டம் நடக்கும் இடத்திற்கு பாஜக தொண்டர்கள் சொந்த வாகனங்களில் வருவதற்கும் காவல்துறை சார்பில் கிடுக்கிப்பிடி போடப்பட்டன.

இதனையெல்லாம் தாண்டி  துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டவரும் சென்னை பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளருமாக இருக்கும் வினோஜ் பி செல்வம் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்களை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசும்போது திரட்டி அண்ணாமலையின் சென்னை யாத்திரையை வெற்றி அடைய வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய ஓட்டுநர்: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

மேடையில் அண்ணாமலை பேசும்போதே தன்னுடைய யாத்திரைக்கு திமுக அரசு பல்வேறு இடைஞ்சல்களை தந்ததாகவும் அதையெல்லாம் தகர்த்து இந்த பொதுக்கூட்டம் நடப்பதாகவும் பேசினார்.

இந்நிலையில், திமுக கோட்டை என கருதப்படும் சென்னையில் பாஜக பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டிய வினோஜ் பி செல்வத்தை ஜெ.பி.நட்டாவும் வெகுவாக பாராட்டியுள்ளார்.திமுகவில் அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை தளபதிகளாக சேகர்பாபு, மா.சு ஆகியோர் இருக்கும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் சென்னை தளபதியாக வினோஜ் பி செல்வம் உருவெடுத்துள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | த்ரிஷா - கூவத்தூர் சர்ச்சை... ஏவி ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News