புதிய வலைதளத்தினை துவங்கினார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டதினை அடுத்து, தற்போது தனி வலைதளம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jan 1, 2018, 05:42 PM IST
புதிய வலைதளத்தினை துவங்கினார் ரஜினிகாந்த்! title=

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டதினை அடுத்து, தற்போது தனி வலைதளம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை கடந்த 26-ம் தேதியில் முதல் நேற்று (டிச., 31) வரை சந்தித்து வந்தார். 

இந்த சந்திப்பானது சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி தெரிவிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையினில் புதிய வலைத்தளம் (https://www.rajinimandram.org/) ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வலைதளம் குறித்து அவர் தெரிவிக்கையில் "இந்த செயலி நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும்" என தெரிவித்துள்ளார்!

 

Trending News