புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னைவாசிகளுக்கான விதிமுறைகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னைவாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 29, 2022, 04:29 PM IST
  • புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது
  • தமிழ்நாடு காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
  • சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்த முழு விவரம்
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னைவாசிகளுக்கான விதிமுறைகள் title=

சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் 2023ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  காவல் துறை விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி, “சென்னையில் மட்டும் வருகின்ற 31ஆம் தேதி 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல் துறை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 16 ஆயிரத்து போலீசார் 1500 ஊர் காவல் படையினர் பணியில் ஈடுபடுவார்கள். மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

இந்த ஆண்டு மரணம் இல்லாத புத்தாண்டாக அனுசரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை. நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாக கண்காணிக்கப்படும் இதுவரை 360 வண்டிகளை பறிமுதல்  செய்துள்ளோம்.

ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தாலும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்.

மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாட்டம் - ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கமிஷனர் போட்டிருக்கும் உத்தரவு

பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். கியூ ஆர் கோட் என்படும் புதிய செய்முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம், போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்திற்கு போவதற்காக இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்று இரவு முழுவதும் அனைத்து வாகன சோதனைகள் செய்யும் இடத்தில் அனைவருக்கும் இந்த க்யூ ஆர் பிரதி கொடுக்கப்படும். மேலும் அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் ஓட்டப்படும். விழிப்புணர்வுக்காக அனைத்து சமூக வலைத்தளங்களில் மற்றும் வானொலி ஆகியவற்றில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம்,

கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடை இல்லை ஆனால் கோவிட் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். சென்னையில் உள்ள அனைத்து பாலங்களும் மூடப்படும், 300க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும், ஜீரோ ஃபெடாலிட்டி நைட் என்பதுதான் எங்களின் நோக்கம், நல்ல விஷயத்தில் உயிர் இழப்புகள் ஏற்படக்கூடாது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டியிடம் போலீசார் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றார். என எச்சரிக்கை விடுத்துள்ளார் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News