ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பேத்திக்கு நடந்த கொடுமை..! மனஉளைச்சலில் சிறுமி..! என்ன நடந்தது?

தற்போது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2022, 02:49 PM IST
  • 12 வயது சிறுமிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகப் புகார்
  • ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
  • நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பேத்திக்கு நடந்த கொடுமை..! மனஉளைச்சலில் சிறுமி..! என்ன நடந்தது?  title=

ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் பேத்திக்கு, ஓய்வு பெற்ற விஜயகுமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நடந்தது?

விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான தாய்ஷா(TAISHA) குடியிருப்பில் ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது பிளாட்டின் அருகே ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். தற்போது விஜயகுமார் மீது ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகன் புகார் அளித்துள்ளார். ஓய்வுபெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியின் 12 வயதான பேத்தி கடந்த 2021 ஆம் ஆண்டில் லிஃப்டில் தனது வீட்டிற்கு செல்ல முயன்றபோது விஜயகுமார் தான் வளர்க்கும் நாய் ஒன்றுடன் ஏறியுள்ளார் . 

Complaint Copy

மேலும் படிக்க | ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!

அந்த நாய் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. நாயை பார்த்த சிறுமி பயத்தில் விஜயகுமாரிடம் நாயை கத்தாமல் கட்டுப்படுத்தும் படி கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமார் சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு நாயை கட்டுப்படுத்த வைத்திருந்த குச்சியை வைத்து சிறுமியை அவர் அச்சுறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரண்டு போன சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்ததை விவரித்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் விஜயகுமாரிடம் இது குறித்து முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து விஜயகுமார் சிறுமிக்கு மிகப் பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினை குறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் புகார் எழுந்தபோது விஜயகுமார் சிறுமிக்கு மனநிலை சரியில்லை என்றும் அவருக்கு மனநல மருத்துவரிடம் சிகிச்சை தேவை என்றும் பதிவிட்டுள்ளார். அந்த குழுவில் சிறுமியுடன் பள்ளியில் படிக்கும் நண்பர்களின் பெற்றோர்களும் இருந்துள்ளனர். இதனையடுத்து சிறுமி நண்பர்கள் அவரை கேலி செய்யக் கூடும் என்று அச்சப்பட்டு பள்ளிக்கு செல்லவே பயந்து அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலே உள்ள விவரங்கள் அவரது புகாரில் இடம்பெற்றுள்ளன. 

Vijayakumar Complaint

ஒது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமாரின் பதிவு ஒன்றில், “பிளாக் ஏ வில் வசித்து வரும் குடும்பத்தில் உள்ள குழந்தை, கொரோனா காலத்தின் ஊரடங்கு விதிமுறைகளை மீறியுள்ளது. இச்சம்பவம் அந்த பிளாக்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.அந்த குழந்தை பெரியவர்களுக்கு மரியாதைத் தராமல் உடன் வசிப்பவர்களையும், அதிகாரியையும் அவமதிக்கும் விதத்தில் நடந்துக்கொண்டது. பெரியவர்கள் மேல் எச்சில் துப்பி, மன்னிப்பு கேட்காமல் திமிராக நடந்துக்கொண்டது. அக்குழந்தைக்கு மனோவியல் ரீதியான கவுன்சலிங் தேவைப்படுகிறது. அந்த குழந்தையின் பெற்றோர் இதற்கு பொருப்பேற்று மீண்டும் இவ்வாறு நிகழாது என்று உறுதியளிக்கவும் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. இச்செயலால் அந்த பிளாக்கில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | காதல் கணவனால் கொலை செய்து குளத்தில் புதைக்கப்பட்ட மனைவி

தற்போது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். இனி இந்த புகார் மீதான விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News