ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது!

செரியன் நகர் வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தனது வாக்கினை பதிவு செய்கிறார்!

Last Updated : Dec 21, 2017, 02:15 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது! title=

நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைப்பெறுகிறது. 

மொத்தம் 2,28,234 வாக்காளர்களை கொண்ட ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள், மாற்று எந்திரங்கள் என மொத்தம் 1178 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணைராணுவப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

நேரடி தகவல்கள் உடனுக்குடன் கீழே...


10:27 21-12-2017
வாக்குபதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படும் பட்சத்தில், தேர்தல் நேரத்தினை அதிகரிக்க வேண்டும் - டிடிவி


10:09 21-12-2017
ஆர்.கே.இடைத்தேர்தலில் வாக்களிக்க தனது செல்லப்பிராணியுடன் வந்த நபருகுக்கு அனுமதி மறுப்பு!... பிறகு தன் செல்லப்பிராணியை நண்பரிடம் அனுப்பிவைத்து விட்டு வாக்களித்துச் சென்றார்!


09:47 21-12-2017
செரியன் நகர் வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தனது வாக்கினை பதிவு செய்கிறார்!


09:26 21-12-2017
வாக்குச்சாவடி எண் 77 (காமராஜர் நகர்) வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு!


09:24 21-12-2017

பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தனது வாக்கினை பதிவுசெய்கிறார்!


09:23 21-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: காலை 9 மணிவரை பதிவான வாக்குகள் 7.56% என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!


09:14 21-12-2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைப்பெறும், பதற்றமான சூழல் நிலவும் வாக்குப்பதிவு மையங்களில் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு!


08:53 21-12-2017
வாக்குச்சாவடி எண் 125 (செரியன் நகர்) வாக்குப் பதிவு இயந்திர கோளாறு சரியானது!


08:33 21-12-2017
வாக்குச்சாவடி எண் 125 (செரியன் நகர்) வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு!


08:30 21-12-2017
"சுதந்திரமான முறையிலும், நியாயமான முறையிலும் இன்றைய தேர்தல் நடைபெற நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்" சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன்


08:20 21-12-2017
"ரூ 6000 அல்லது ரூ 60,000... எதுவாக இருந்தாலும் சரி, வெற்றிப்பெறப் போவது நாங்கள் தான்., அதிமுக-விற்கு பாடம் கற்பிக்க ஆர்.கே. நகர் வாக்காளர்கள் தயாராக உள்ளனர்!"
- திமுக வேட்பாளர் மருதுகணேஷ்


08:16 21-12-2017
பாஜக வேட்பாளர் கரு நாகராஜன், தனது வாக்கினை பதிவுசெய்ய வரிசையில் காத்திருக்கின்றார்!


08:08 21-12-2017
திமுக வேட்பாளர் மருதுகணேஷ், வாக்குச்சாவடி எண் 134-ல் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருக்கின்றார்!


08:02 21-12-2017

258 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு துவங்கியது!
பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பழுதான இயந்திரம் சரிசெய்யப்பட்டது!


07:45 21-12-2017
பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதடைந்துள்ளது. மாதிரி வாக்கு பதிவு சோதனையின்பொழுது இயந்திரம் பழுதாகியுள்ளது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்


07:09 21-12-2017
காலை 7 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது!, 8 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கும்!


 

Trending News