ஆர்கே நகர் இடைத்தேர்தல்: இன்று ஸ்டாலின் வீதி வீதியாக பிரசாரம்

திமுக செயல் தலைவர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆர்.கே.நகர் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். மொத்தம் 5 இடங்களில் இன்று அவர் பேசுகிறார்.

Last Updated : Dec 21, 2017, 02:12 PM IST
ஆர்கே நகர் இடைத்தேர்தல்: இன்று ஸ்டாலின் வீதி வீதியாக பிரசாரம் title=

திமுக செயல் தலைவர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆர்.கே.நகர் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். மொத்தம் 5 இடங்களில் இன்று அவர் பேசுகிறார்.

அதன் விவரங்கள் வருமாறு:-

வீரராகவன் ரோடு செரியன் நகர் 3-வது தெரு சந்திப்பில் பேசுகிறார்.

அதன் பிறகு தேசிய நகர் 2-வது தெரு மெயின் ரோடு வழியாக செரியன் நகர் 4-வது தெரு, கண்ணப்பிள்ளை தெரு செல்கிறார்.

39 ‘அ’ வட்டத்தில் பொன்னுசாமி தெரு, இருசப்பன் 1-வது சந்து, இருசப்பன் மெயின் ரோடு, பீச் ரோடு வழியாக வெங்கடேசன் ரோடு (பேசும் இடம்), ஆவூர் முத்தையா தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு வழியாக டி.எச். ரோடு.

40 ‘அ’ வட்டத்தில் ஏ.இ. கோவில் தெரு, கிராஸ் ரோடு வழியாக செல்கிறார்.

39-வது வட்டத்தில் பாரதியார் நகர், எம்.பி.டி. குடியிருப்பு, அ.அ.திட்ட சாலை வழியாக.

40-வது வட்டத்தில் ஜீவா நகர் (பேசும் இடம்), சேனியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் குடியிருப்பு.

40 ‘அ’ வட்டத்தில் இளைய முதலி தெரு வழியாக, வ.உ.சி.நகர், சேனியம்மன் கோவில் தெரு (பேசும் இடம்), 

வ.உ.சி.நகர் மார்க்கெட் மெயின் தெரு, மாதாகோவில் தெரு உள்பட 5 இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். 

Trending News