ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.88 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித் துறை கைப்பற்றியுள்ளதாக நேற்று மாலை செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக தனி தேர்தல் அதிகாரி விக்ரம்பத்ரா நேற்று மாலை அவசரமாக டெல்லி சென்றார். இன்று தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகின்றார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, தனியார் விடுதி உட்பட பல இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய விஜயகாந்த், இன்று ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்கிறார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து 9-ம் தேதி(ஞாயிற்றுகிழமை) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்காளப் பெருமக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று 38, 39, 40, 41, 42, 43, 47 ஆகிய வட்டங்களில் வீதி, வீதியாக கழக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக செயல் தலைவர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆர்.கே.நகர் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். மொத்தம் 5 இடங்களில் இன்று அவர் பேசுகிறார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தனது அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்பதற்காக இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இரண்டாகப் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க-வில், அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.
அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:-
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் இன்று வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இதற்க்கு முன்னதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவர்களின் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை கருதி தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவு அடையும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.