தாம்பரம்: இரும்பு ராடுகளுடன் சென்று கொள்ளையை அரங்கேற்றிய 3 கொள்ளையர்கள்

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் அடுத்து மூன்று கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து 25 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2023, 08:33 PM IST
  • தாம்பரத்தில் கொள்ளை
  • கொள்ளையர்கள் அட்டூழியம்
  • காவல்துறை விசாரணை
தாம்பரம்: இரும்பு ராடுகளுடன் சென்று கொள்ளையை அரங்கேற்றிய 3 கொள்ளையர்கள் title=

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்திவருபவர் ஜெயபிரகாஷ. நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்றார். இந்நிலையில் அதிகாலை கடை திறக்க வந்தபோது ஷட்டர் உடைத்திருந்தது. இதனைக் கண்டு பதற்றமடைந்த அவர் உடனடியாக கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது, கடையில் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவியை போட்டுப் பார்த்த அவர் ஹெல்மெட் அணிந்த  நிலையில் ஒரு கொள்ளையன், இன்னொரு கொள்ளையன் இரு ராடுகளை வைத்து ஷட்டர்களை உடைத்தது தெரியவந்தது.

அவருடைய கடையில் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பக்கத்தில் இருந்த செல்போன் கடையில் ஒரு பூட்டை உடைத்துவிட்டனர். ஆனால் இன்னொரு பூட்டை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் கடையில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையில் இருந்து தப்பின. ஆனால் அதே சாலையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திர சேகரன் என்பவரின் கடையிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

மேலும் படிக்க | 'சேகர்பாபு அமைச்சர் பதவியில் விலக வேண்டும்' - கெடு விதித்த அண்ணாமலை

சந்திரசேகரன் என்பவர் நாட்டு மருந்துக் கடை வைத்துள்ளார். அந்த கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவை தள்ளிவிட்டு, கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர். இது குறித்து அப்பகுதி வணிகர்கள் பீர்க்கன்காரணை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினரும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சியில் கொள்ளையர்கள் மூன்று பேர் பெரிய இரும்பு கம்பியை கொண்டு பூட்டுகளை உடைத்தும், இரும்பு ஷட்டர்களை எளிதில் திறக்கும் விதமாக செயல்பட்டது அங்கு பொருத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகளை வணிகர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் பதிவிட்டு தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தி, காவல்துறை தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | 'இவர்கள் ராவணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்' உதயநிதிக்கு எதிராக புகார்..! விரைவில் விசாரணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News