கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -தமிழக அரசு!

7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையான சம்பள உயர்வு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Updated: Jul 7, 2018, 06:27 PM IST
கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -தமிழக அரசு!

7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையான சம்பள உயர்வு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் ஊதியக் குழு, அண்மையில் 7-வது ஊதியக்குழுவை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அதற்கு இணையாக அலுவலர்கள் பதவியில் உள்ளவர்களுக்கான திருத்திய ஊதிய உயர்வு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இதன் மூலம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 16 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. 2016 ஜனவரி முதல் கருத்தியலாகவும், 2017 அக்டோபர் தேதியிட்டு பணப்பயனாகவும், கடந்த ஜூன் மாதம் வரையான ஊதிய உயர்வு நிலுவையினை பணமாகவும் பெறலாம் என தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.