நீர் சேமிப்பு திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தாதது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்டில் இன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால், போதிய நீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் உப்பு கலந்து காணப்படுவதால், அதையும் பயன்படுத்த இயலாத சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். மேலும் கர்நாடகா தர வேண்டிய காவிரி நீரும், அவர்கள் செய்யும் தவறான சாகுபடியால் வீணடிக்கப்பட்டு கிடைப்பதில்லை என்று கூறினார்.
இதையடுத்து பேசிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, கர்நாடகா நீர் தரவில்லை என்றாலும் சேமித்த நீரைப் பயன்படுத்தலாமே என்று கேள்வி எழுப்பினர். மேலும் நீர்ப்பங்கீடு தொடர்பான பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு கோர்ட் அணுகி வருகிறது என்றும், நீர் சேமிப்பு குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டனர்.