சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிரான உறுப்பினர் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை விஷால் திநகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி போடப்பட்ட பூட்டை உடைக்க வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு க்கு இருந்த போலீசாரிடம் முறையிட்டார். அப்போது சாவி எடுத்துவந்து திறக்கலாம் என்று போலீசார் கூறினார். ஆனால் திருட்டுத்தனமாக போடப்பட்ட பூட்டுக்கு போலீசார் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்றும் அந்த சாவியால் திறக்க முடியாது உடைத்து உள்ளே செல்கிறோம் என்றும் விஷால் வாக்குவாதம் செய்தார்.
இதனையடுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதம் அதிகரித்தால் விஷால் மற்றும் மன்சூர் அலிகானை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட்ரரப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை செய்தது. இதையடுத்து, தமிழ் திரைப்பட சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிண்டி தாசில்தார் ராம்குமார் சங்கத்தில் போடப்பட்ட சீலை அகற்றினார்.