மதுரை: போடி நாய்க்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அவரின் இளைய மகளான 7 வயது மேகாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சுரேஷ் அங்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குளுக்கோஸ் மற்றும் உரிய மருத்துகள் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். 3 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய சிறுமி மேகா, திடீரென வாந்தி எடுத்து, மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பதறிப்போன சிறுமியின் தாய், மேகாவை தோளில் சுமந்து கொண்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு (Govt Hospital) சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மேகா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், பதறிப்போன மேகாவின் பெற்றோர், தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாகவே தங்களுடைய மகள் இறந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். உரிய பரிசோதனை செய்து முறையாக சிகிச்சை அளித்திருந்தால், மேகா இறந்திருக்கமாட்டாள் என்றும் அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
ALSO READ | கொலையா? தற்கொலையா? தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனும், சிறுமியும் சடலமாக மீட்பு
அதேநேரத்தில், சிறுமி வசிக்கும் வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக இருக்கிறது. சுகாதாரமற்ற நிலை அப்பகுதியில் இருப்பதால், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் (Dengue Fever) ஏற்பட்டு மேகா இறந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சுகாதார சீர்கேடு குறித்து வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பல இடங்களில் மழையால் தேங்கிய நீர் இன்னும் வடியவில்லை எனக் கூறுகின்றனர்.
சிறுமியின் தாய் பேசும்போது, தனியார் மருத்துவமனையில் வழங்கிய மாத்திரையை சாப்பிட்டவுடன் சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், மேகா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறும் மேகாவின் தாயார், தனது குழந்தை இறப்புக்கு தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த 7 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | சேலம்: வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து- 1 பலி, 3 வீடுகள் முற்றிலும் சேதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR