கோவை: கைராசி மருத்துவர் என நம்பி மருத்துவம் பார்க்க வந்தவர்களை ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆன மருத்துவர் மீது மக்கள் புகர் கொடுத்துள்ளனர். காங்கேயம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளிடம் அவர்களது உறவினர்களிடமும் 10 லட்சம் வரை பல காரணங்களை சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி க்கொண்டு பாண்டு பத்திரம் எழுதி கொடுத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சித்தையா. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த சித்தையா, கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் இருதயத் துறை பேராசியராகவும், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர், ஒன்றரை கோடி பணத்துடன் மருத்துவர் தலைமறைவாகிவிட்டார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற சித்தையா, அதன் பிறகு கோவையில் மூன்று இடங்களில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றிய இ.சி.ஜி டெக்னீசியன் விஜயலட்சுமி என்பவரிடம் தனது மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் படித்து வரும் தனது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு வழியில்லாமல் இருப்பதாக கூறி 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்காக பாண்டு பத்திரத்தில் எழுதி கொடுத்தோடு, கையெழுத்திட்ட காசோலையையும் கொடுத்துள்ளார்.
கடந்த 2017ல் பணம் வாங்கிய பணத்தை தற்போது வரை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் விஜயலட்சுமியின் பேத்தியிடமும் 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, கைராசி மருத்துவர் என நம்பி மருத்துவர் சித்தையாவிடம் மருத்துவம் பார்க்க வந்த காங்கேயம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளிடம் அவர்களது உறவினர்களிடமும் 10 லட்சம் வரை இதே காரணங்களை சொல்லியும் பாண்டு பத்திரம் எழுதிகொடுத்தும் பணத்தை வாங்கியுள்ளார்.
இது மட்டுமல்ல, கிளினிக்கிற்கு வரும் மருந்தக பிரதிநிதிகளிடம் வாங்கிய மருந்துக்கு பணம் கொடுக்காமல் இதே காரணங்களைக் கூறி பல லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். மீண்டும் அவர்கள் இன்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அவரிடம் இருந்து எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க - பொன்முடி விவகாரம்... ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ