மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் இளைஞர் பலி

சிவகங்கையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் வேடிக்கை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 16, 2022, 04:27 PM IST
மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் இளைஞர் பலி title=

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் பாரம்பரரியமான விரட்டு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் நெற்குப்பை மற்றும் சுற்றியுள்ள 16 பட்டி கிராமங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டில் களமிறங்கப்பட்டது. இந்தப் போட்டியில், 16 பட்டி கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் காளைகளைப் பிடிக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ALSO READ | பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு..! திமிரும் காளைகள்.. சீறும் காளையர்கள்

இதனால், வெளியூர்களில் வந்திருந்த இளைஞர்கள் மட்டும் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் அனைத்தும் சீறிச் சென்றனர். காளைகளை பிடிக்க காத்திருந்த வீரர்களும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை லாவகமாக மடக்கினர். திமிலை நிமிர்த்தி கம்பீரமாக விளையாடிய சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. போக்கு காட்டி நின்ற காளைகளை, தங்களுக்கே உரிய பாணியில் கம்பீரமாக மாடுபிடி வீரர்கள் பிடித்தனர்.

ALSO READ | ஜல்லிக்கட்டு; அவனியாபுரத்தில் 24 காளைகளை அடக்கிய இளைஞர்..! முதலமைச்சர் வழங்கிய கார் பரிசு

இந்தப் போட்டியை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி கண்டு களித்தனர். அப்போது, மகிழ்ச்சியாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் சோக சம்பவமாக, வேடிக்கை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் காளை முட்டி உயிரிழந்தார். கொன்னதானப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை காளை முட்டியதில் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேடிக்கை பார்த்த மக்கள், இந்த சம்பவத்தால் சோகத்துடன் மருத்துவமனைக்கு சென்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News