WTO-க்கு எதிரான தமிழில் முழக்கங்கள் எழுப்பிய தென் அமெரிக்க விவசாயிகள்- வீடியோ

உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் உலக வர்த்தக அமைப்புக்கு அர்ஜென்டினாவில் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழில் கண்டன முழக்கம் எழுப்பிய போது தென் அமெரிக்காவை சேர்ந்த இளம் விவசாயிகள்.

Last Updated : Dec 21, 2017, 06:26 PM IST
WTO-க்கு எதிரான தமிழில் முழக்கங்கள் எழுப்பிய தென் அமெரிக்க விவசாயிகள்- வீடியோ title=

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை குறைக்க வேண்டும் என உலக வர்த்தக அமைப்பு கூறியிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல உலக நாடுகள் சேர்ந்த விவசாயிகள் உலக வர்த்தக அமைப்பு கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, இந்தியாவில் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் பெரும் உதவியாக இருகிறது. அதற்கு தடை விதிக்க உலக வர்த்தக அமைப்பு கூறியது பெரும் கண்டனத்துக்குரியது எனக் கூறினார். மேலும் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் கண்டன குரல் எழுப்பி வருகிறார். 

இந்நிலையில், அர்ஜென்டினாவில் பியூனஸ் ஏர்ஸ் நகரில் உலக வர்த்தக அமைப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு கண்டன குரல் எழுப்பினார் செல்லமுத்து. அப்பொழுது செல்லமுத்து தமிழில் கண்டன முழக்கம் எழுப்பிய போது தென் அமெரிக்காவை சேர்ந்த இளம் விவசாயிகளும் அவருடன் சேர்த்துக் கொண்டு தமிழில் முழக்கம் எழுப்பினார்கள்.

வீடியோ:

Trending News