சென்னை - கோவை சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வரும் மே 22-ஆம் நாள் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

Last Updated : May 19, 2018, 12:56 PM IST
சென்னை - கோவை சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவிப்பு! title=

வரும் மே 22-ஆம் நாள் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

இதுகுறித்து தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது...

"சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22-ஆம் நாள் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண்: 06043), மறுநாள் காலை 6.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். இது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழித்தடத்தில் செல்லும். மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 20-ஆம் நாள் காலை 8 மணிக்கு துவங்கும்" என குறிப்பிட்டுள்ளது!

Trending News