கலைஞர் திருவுருவச்சிலை திறப்புவிழாவிற்கு சோனியாகாந்திக்கு அழைப்பு...

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழாவிற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி கந்த்க்கு அழைப்பு!  

Last Updated : Dec 9, 2018, 07:19 PM IST
கலைஞர் திருவுருவச்சிலை திறப்புவிழாவிற்கு சோனியாகாந்திக்கு அழைப்பு... title=

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழாவிற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி கந்த்க்கு அழைப்பு!  

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழா அழைப்பிதழை, கழக தலைவர் அவர்கள், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்களை சந்தித்து வழங்கினார். மேலும், திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை வருகிற 16-12-2018 அன்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்கள் திறந்து வைக்கும் விழா நடைபெற உள்ளது.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (9-12-2018) காலை, புதுடெல்லியில் உள்ள திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, தமிழினத் தலைவர் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அளித்தார்.

அத்துடன், திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து, அஜயன் பாலா அவர்கள் எழுதிய “செம்மொழிச் சிற்பிகள்” நூலினை வழங்கி வாழ்த்துத் தெரிவித்ததோடு; பின்வரும் “பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி”யையும் வெளியிட்டார்.

"72 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கு( நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களுக்கு), திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட தாங்கள், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப் பிரகடனப்படுத்து
வதற்கு மிகவலிமையான அடித்தளம் அமைத்தீர்கள்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட தாங்கள், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவம் கொடுத்திடும் வகையிலும்,அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறீர்கள்.

பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட அன்னை சோனியா அவர்களே !

தாங்கள் நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்!"

இந்நிகழ்வின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., நாடாளுமன்ற கழக குழு தலைவர் கனிமொழி, எம்.பி., கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்பின் போது, காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு “மேகதாது அணை” கட்டுவது குறித்து, திருமதி சோனியாகாந்தி அம்மையாரிடமும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களிடமும், கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பேசினார்.

 

Trending News