அதிமுக ஸ்தாபக நாள்- 45 வது ஆண்டு தொடக்கம்!!

Last Updated : Oct 17, 2016, 11:58 AM IST
அதிமுக ஸ்தாபக நாள்- 45 வது ஆண்டு தொடக்கம்!! title=

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 44 ஆண்டுகள் முடிவடைந்து. அதிமுகவின் 45 வது ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய எம்.ஜி.ஆர் ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1953-ம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துகொண்ட எம்.ஜி.ஆர் குறுகிய காலத்திலேயே தனது மக்கள் செல்வாக்கால்  திமுகவில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். 1972-ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் திமுகவிலிருந்து விலகி அக்டோபர் 17-ம் தேதி 1972-ம் ஆண்டு தமிழகத்தின் புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. அடுத்து தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் முதலமைச்சர் அரியணையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் எம்ஜிஆர்.

அவர் மறைவுக்கு பின் 1991ம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றி பெற்றது. முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா. அதன்பின் அவரது தலைமையில் 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக்  கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது ஜெயலலிதாவின் மகத்தான  அரசியல் சாதனையாகக்  கருதப்படுகிறது.

45 வது ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அவைத் தலைவர் மதுசூதனன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ஆண்டு மலரை வெளியிட்டார். முதல் முறையாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க்கமுடியவில்லை. 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை யின்  நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

 

Trending News