போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் மீண்டும் தொடரும்!!

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவில்லை என்றால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.  

Last Updated : Jan 8, 2018, 06:09 PM IST
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் மீண்டும் தொடரும்!! title=

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவில்லை என்றால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் என்று  தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. 

கூட்டம் முடிந்ததும்  தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:- தொழிலாளர்களுக்கு தர வேண்டிய தொகையை உடனே வழங்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தொழிற்சங்கத்தை கேட்காமல் ஒப்பந்தத்தை தயார் செய்துள்ளது.3-வது அமர்வுக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம், தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

 16 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது.பயிற்சி இல்லாத ஓட்டுனர்களை வைத்து பேருந்துளை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது. அனைத்து கோட்ட தலைமை அலுவலகம் முன் நாளை மாலை குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும்,போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கினால் எதிர்த்து போராடுவோம் என  சிஐடியூ தலைவர் சவுந்தராஜன் கூறினார்.

Trending News