குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை அதை அமல்படுத்துவதில் பின்வாங்க மறுத்துவிட்டார்.
மேலும், சிறுபான்மையினருக்கு அரசாங்கம் குடியுரிமை வழங்கும் என்று கூறியது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் அவர்களின் மத நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தபடுவதால் என குறிப்பிட்ட அவர் புதிய சட்டம் குறித்து நாட்டு மக்களை தவறாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறது எனவும் அவர் கண்டித்தார்.
செவ்வாயன்று, கிழக்கு டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, கிளர்ச்சியாளர்கள் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்களை வீசினர், இதைத் தொடர்ந்து பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்." இந்த கலவரம் குறித்து டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் அனில் மிட்டல் தெரிவிக்கையில்., அமைதியான போராட்டத்தை நடத்திய பின்னர் எதிர்ப்பாளர்கள் திரும்பிச் செல்லும்போது மதியம் 1.30 முதல் 1.45 மணி வரை வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆனால் திடீரென்று அந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்த சில குற்றவாளிகள் பேருந்துகளில் கற்களை வீசினர், அதைத் தொடர்ந்து வன்முறை எதிர்ப்பாளர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச வேண்டியிருந்தது," என குறிப்பிட்டுள்ளார்.
கல் வீச்சின் போது பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது. டெல்லி பொலிஸ் வட்டாரங்களின்படி, பொலிசார் ஒரு புல்லட் கூட சுடவில்லை, கூட்டத்தை கலைக்க தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை மட்டுமே வீசினர் என கூறப்படுகிறது.
இது தொடர்பான வளர்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று காங்கிரஸ் வன்முறையை பரப்புவதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) என்ற பெயரில் "இந்திய முஸ்லிம்களை பயமுறுத்துவதற்கான சூழலை உண்டாக்குவதாகவும் குற்றம்சாட்டினார்." உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டினார். "இந்த செயல் நீண்ட காலமாக மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளவர்களுக்கானது. நாங்கள் செய்த சட்டம் மூன்று அண்டை நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக இந்தியாவுக்கு வந்துள்ள மக்களுக்காகவே. எனவே எந்தவொரு இந்திய முஸ்லீம் அல்லது வேறு எந்த இந்தியருக்கும் உரிமை மீறல் ஏற்படாது" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 19 எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) உள்ள சட்டத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியது. கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களில் உரையாற்றிய காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) மீது முழு நாடும் போராட்டம் நடத்தி வருவதாகவும், வடகிழக்கு மற்றும் டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கையால் எதிர்க்கட்சிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி குழுவில் சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ், திமுகவின் டி.ஆர். பாலு, திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்டின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் அடங்கியிருந்தனர்.
டெல்லி ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Even though college vacation is announced, the sit-down protest will continue - Chennai University Students Association#MadrasUniversity #CAAProtest #CABProtest pic.twitter.com/FiGDuS8APn
— அறிக்கி(@arikisiva) December 17, 2019
சென்னையில் லயோலா, நியூ கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 2 மாணவர்களை போலீசார் கடத்தி வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் போராட்டம் நீடிப்பதால் 6 நாட்களுக்கு சென்னை பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.