ஆளுநர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்

ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் கேட்டை பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2018, 07:21 PM IST
ஆளுநர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் title=

புதுச்சேரியில் துணைநிலை கவர்னராக இருக்கும் கிரண்பேடி அவர்கள் அவ்வப்போது முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை முடித்துக்கொண்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது மாளிகைக்கு திரும்பும்போது, மாணவர்கள் கல்லூரியிலும் செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும் என ஆளுநர் கிரண்பேடியிடம் கூறினார்கள். 

அதற்கு ஆளுநர் கிரண்பேடி தற்போது நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன். இதனால் உங்களுடைய கோரிக்கைகள் குறித்து ஆளுநர் மாளிகைக்கு வந்து விரிவாக கூறுமாறு அறிவுறுத்தினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கிருந்து புறப்பட முற்பட்டார் ஆளுநர். ஆனால் மாணவர்கள் கல்லூரியின் கதவை பூட்டி வளாகத்திற்குள்ளேயே கிரண்பேடியை சிறைவைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இச்சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

உடனே அங்கு வந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்களை வலுகட்டயமாக அப்புறப்படுத்தி ஆளுநர கிரண்பேடியை மீட்டு, பாதுகாப்பாக காரில் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தனர்.

Trending News