TN Bus Strike: அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்-மீண்டும் தொடங்குவது எப்போது?

TNSTC Employees Bus Strike : கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்ததை தொடர்ந்து, அவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2024, 04:48 PM IST
  • கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
  • இதனால் பொதுமக்கள் சிரமம்
  • தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
TN Bus Strike: அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்-மீண்டும் தொடங்குவது எப்போது? title=

Transport Employees Bus Strike Withdrawal: கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்ததை தொடர்ந்து, அவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை அடுத்து, வரும் 19ஆம் தேதி வரை இந்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை நிறுத்திவைப்பதாகவும் உடனடியாக நாளை பணிக்கு திரும்ப சொல்லி ஊழியர்களை கூறுவதாகவும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்டவை உத்தரவாதம் கொடுத்துள்ளது. 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் பாதிப்பு: 

தமிழ்நாட்டில் சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன் தினத்தில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தி ஈடுபட்டனர். இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. சரியான பஸ்கள் இயக்கப்படாததால் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

நடந்து முடிந்த பேச்சு வார்த்தைகளில், 2 கோரிக்கைகளை மட்டும் தற்போதைக்கு பரிசீலிக்க முடியும் எனவும், பிற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை விடுமுறைகளை அடுத்து பிற கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் P.R.ராமன் ஆஜராகி நேற்று முறையீடு செய்தார். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறி, இதுதொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு

அதனை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். வழக்கின் மனுவை அரசு தரப்பிற்கும், போக்குவரத்து கழகங்கள் மற்றும் சம்பந்தபட்ட தொழிற் சங்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

போராட்டம் தற்காலிக வாபஸ்:

வேலை நிறுத்த போராட்டம் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. அதில், பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும் 7000 தொழிலாளர்களா அல்லது பொதுமக்களா என்ற நிலை உருவாகி உள்ளது. அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. பொது நலனை கருதி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 6ல் இறுதி வரவுள்ளதாகவும், பேச்சுவார்த்தை ஜனவரி 19ல் நடைபெற உள்ளதால் அதனால் தற்போதைய நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற உத்தரவிட வேண்டும் எனவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொழிற்சங்கங்கள் சார்பில், டிசம்பர் 19ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அதில் அரசோ போக்குவரத்து கழகங்களோ கருத்தில் கொள்ளாமல் மௌனம் காத்ததாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது.  92000 ஓய்வூதியதாரர்களுக்கு தலா 2000 ரூபாயை 8 முதல் 10 நாட்களுக்குள் வழங்கலாம் என்ற நீதிமன்றத்தின் ஆலோசனையை அரசு தரப்பு ஏற்க மறுத்துவிட்டது. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக உள்ளதால் இந்த போராட்டம் தொடருவது குறித்து பொங்கல் பண்டிகையை அடுத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News