சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (K Palanisamy), வெள்ளியன்று வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்காக ‘அம்மா கோவிட் -19 திட்டத்தை’ (Amma COVID-19 Scheme) அறிமுகப்படுத்தியதோடு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் சமூக தலையீட்டு திட்டத்தையும் திறந்து வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், 2,500 ரூபாய் செலுத்தும் ஒவ்வொருவருக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், டிஜிட்டல் தெர்மோமீட்டர், 14 முகக்கவசங்கள், சானிடிசர், சோப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரா குடிநீர் மற்றும் அதிமதுரம் ஆகியவற்றின் பாக்கெட்டுகள் மற்றும் பல வைட்டமின் மற்றும் Zinc மாத்திரைகள் கொண்ட ஒரு மருத்துவ கிட் கிடைக்கும். இந்த திட்டம் ஓமந்தூரார் அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மூலம் செயல்படுத்தப்படும்.
மேலும், சமூக தலையீட்டு திட்டத்தின் கீழ், 33 கோடி ரூபாய் செலவில் முதல்வர் பல விழிப்புணர்வு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக, LED டிஸ்ப்ளேக்கள் கொண்ட 30 வாகனங்கள் நகர வீதிகளில் அவ்வப்போது கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
ALSO READ: ஆகஸ்ட் 17 முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass: முதல்வர் கெ.பழனிசாமி
கொரோனா வைரஸ் (Corona Virus), டெங்கு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் சென்னையில் உள்ள 30 லட்சம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்ட ஒரு லட்சம் பேரை வாழ்த்துவதற்காக முதலமைச்சர் ஒரு தானியங்கி வாய்ஸ் காலையும் வெளியிட்டார்.
நகராட்சி நிர்வாகம், வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறையால் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களையும் பழனிசாமி திறந்து வைத்தார். கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 24.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தையும், பல மருத்துவ கட்டிடங்களையும் முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த சந்தர்பத்தில் நிர்வாக கட்டிடங்கள், நூலகம், மாணவர்களின் விடுதி ஆகியவற்றிற்கும் அடித்தள கற்கள் போடப்பட்டன.
செயலகத்தில் (Secretariat) நடைபெற்ற மற்றொரு விழாவில், தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 505 சர்வேயர்கள் மற்றும் வருவாய் துறையில் 20 இளைய உதவியாளர்களுக்கு முதலமைச்சர் நியமன உத்தரவுகளை வழங்கினார்.
கடலூரில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சோளத்திற்கான மதிப்பு கூட்டல் மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். செயலகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வுகளில் சுகாதார அமைச்சர் சி விஜய பாஸ்கர், வருவாய் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைச் செயலாளர் கே.சண்முகமும் உடனிருந்தார்.
ALSO READ: விரைவில் தமிழகத்தில் 3,500 நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: செல்லூர் கே ராஜு!!