COVID-19 Update July 31: இன்றைய கொரோனா பாதிப்பு 1,986; 26 பேர் உயிரிழப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,986 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2 04பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2021, 07:52 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று கொரோனா பலி 26
  • 2,178 பேர் கோவிட் நோய் குணமாகி வீடு திரும்பினார்கள்
COVID-19 Update July 31: இன்றைய கொரோனா பாதிப்பு 1,986; 26 பேர் உயிரிழப்பு   title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,986 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2 04பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 26 பேர் இறந்தனர். கொரோனா தொடங்கியது முதல் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,716 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 19 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,076-ஐ எட்டியுள்ளது. 

ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 2,178 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,04,805 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மொத்தமாக 1,60,171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,986 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சங்களுகு மத்தியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு,  தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் RTPCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1,986

• இன்றைய மரணங்கள் - 26

• மொத்த பாதிப்பு - 25,59,597

• இன்றைய டிஸ்சார்ஜ் - 2,178

• இன்றைய சோதனைகள் - 1,60,171

ALSO READ | Elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News