21 மாநகராட்சியிலும் திமுக கூட்டணிக்கு கைப்பற்றும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வாக்கினை செலுத்தினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2022, 11:58 AM IST
21 மாநகராட்சியிலும் திமுக கூட்டணிக்கு கைப்பற்றும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி title=

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

வேட்புமனு பரிசீலனையில் 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,14,324 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழிசை சௌந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அமைச்சர் கே.என்.நேரு , பொன்முடி , துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வாக்களித்தனர்.

மேலும் படிக்க | LIVE நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குப்பதிவு மும்முரம்

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் சென்னை 122 வார்டில் தேனாம்பேட்டை எஸ்ஐஇடி 2 கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சென்னை மாநகராட்சியின் 122 வது வார்டில் எனது வாக்கினை ஜனநாயக முறைப்படி செலுத்தினேன். அதே போல் இன்றைக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். உள்ளாட்சி என்பது சிறு குடியரசு என மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் மூலமே மக்களுக்கு கடமையாற்ற வேண்டும். 

தொடர்ந்து பேசிய அவர், கோவையில் நேற்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை .கடந்த ஆட்சியில் அடாவடித்தனம். அயோக்கியத்தனம் செய்தார் எஸ்பி வேலுமணி. அவர் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று 4 நேரத்துக்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்டு, ராணுவம் வரனும்வர வேண்டும். ராணுவத்தை வரவழைக்கும் அளவுக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை. 

இந்த தேர்தலில் நிச்சயமாக சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குகளை போல இந்த தேர்தலிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். நகைகடன் பொறுத்தவரை பல்வேறு அயோக்கிய தனங்களை கடந்த ஆட்சி காலத்தில் நகை கடன் பெறப்பட்டு உள்ளது. தற்போது முறையானவர்களுக்கு நகை கடன் அளிக்கபட்டுள்ளது. வாக்கு செலுத்த தவறிய மக்களும் திமுக வுக்கு அளிக்கும் வகையில் இன்றைய நிலை உள்ளது. 21 மாநகராட்சியையும் திமுக கைப்பற்றும் என்றார்.

மேலும் படிக்க | காலம் மாறுகிறது காற்று பாஜக பக்கம் வீசுகிறது - குஷ்பூ சிறப்புப் பேட்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News