இன்று காலை தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
5 மணி முதல் 6 மணி வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. .
ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு என்ற செய்திகள் வந்தன. அவை சரி செய்யப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கின. ஆனால், மத்திய இணை அமைச்சர் முருகன் ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை ஏழு மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். முதியவர்கள் முதல், முதல்முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு பெற்ற இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலதரப்பு வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும்.
இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று, அதாவது 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
வேட்புமனு பரிசீலனையில் 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,14,324 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.