பிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு 2 தேர்வுகள் இல்லை: தமிழக அரசு!!

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் மொழிப்பாட தேர்வுகளில் தமிழக அரசு அதிரடியாக மாற்றம் கொண்டுவந்துள்ளது!  

Last Updated : Jun 11, 2018, 02:51 PM IST
பிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு 2 தேர்வுகள் இல்லை: தமிழக அரசு!! title=

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும். இந்த தேர்வு முறை மாற்றம் இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே-12 அன்று ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தது. 

தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 82.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. பெற்றிருந்தனர். எனினும், இதன் மொழிப்பாட தேர்வுகளில் இரண்டு தாள்களின் அடிபடையில் நடத்தபட்டது. 
 
இந்நிலையில், தமிழக அரசு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் மொழிப்பாட தேர்வுகள் ஒரே தாளில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 

Trending News