கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதனை மறக்காதீங்க!

தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்டோபர் 26ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Oct 14, 2024, 09:53 AM IST
  • சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் வேலைநிறுத்தம்.
  • வரும் அக்டோபர் 26ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு.
  • சிலிண்டர் தேவைபட்டால் முன் கூட்டியே ஆர்டர் செய்வது நல்லது.
கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதனை மறக்காதீங்க! title=

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும், அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்டோபர் 26-ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் போதுமான கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் போக கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், டெலிவரி செய்பவர்கள், மெக்கானிக்குகள், டிரைவர்கள், கிடங்கு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படி நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையாவது வழங்க வேண்டும் என்றும், இந்த ஊதியமும் தொடர்ந்து உயர்த்தப்பட வேண்டும் என்றும், தீபாவளி போன்ற சிறப்பு பண்டிகைகளுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்றும், 

மேலும் படிக்க | கனமழை குறித்த அப்டேட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் ஊதிய விடுமுறை வேண்டும் என்றும் வரும் அக்டோபர் 26-ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் யூனியன் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் சிவக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கேஸ் சிலிண்டர் வழங்கும் நிறுவனங்கள் தொழிலாளர்களை நியாயமாக நடத்துவதில்லை. தொழிலாளர்களை பணியமர்த்தும் ஏஜென்சிகள் தான் பணம் செலுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஏஜென்சிகள் சில தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்குகின்றன, மற்றவர்களைப் புறக்கணிக்கின்றன, இது சரியல்ல என்று குற்றம் சாட்டினர்.

பல தொழிலாளர்களுக்கு சீருடைகள் மட்டும் கொடுத்துவிட்டு முறையான சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். இதனால் தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிறது, அநீதி இழைக்கப்படுகிறது. இது குறித்து பொறுப்பாளர்களிடம் கூற முற்பட்டால், மீண்டும் பணிக்கு வர வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக, தொழிலாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்த உள்ளனர். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை என்றால், அவர்கள் நியாயமாக நடத்தப்படும் வரை வேலைநிறுத்தம் செய்வார்கள். இந்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால், விநியோகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மக்களை கவலையடையச் செய்துள்ளது. 

ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி இருக்காது. இது வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு கேஸ் சிலிண்டர் என இரண்டிற்கும் பொருந்தும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் மக்கள், திடீரென்று கேஸ் காலியானால் பாதிக்கப்படுவார்கள். மேலும், கேஸ் டெலிவரி மட்டும் இன்றி கேஸ் கசிவு தொடர்பான புகார்களை சரி செய்யவும் ஆட்கள் யாரும் வரமாட்டார்கள். இதனால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். மொத்தமாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மழை தொடங்கும் முன்பு வீட்டில் இந்த பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News