பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டதாக தமிழக மாணவி சோபியா-வினை கைது செய்தமைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்!
நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானந்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா நேற்று மாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். இதனையாடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சோபியாவிற்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது....
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” https://t.co/JoPajdrSW5
— M.K.Stalin (@mkstalin) September 3, 2018
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது...
தூத்துக்குடி மாணவி சோபியா கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) September 4, 2018
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தெரிவிக்கையில்...
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.— Kamal Haasan (@ikamalhaasan) September 4, 2018
TTV தினகரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவுத...
கண்டன அறிக்கை :
சகோதரி சோபியா கைது,
தமிழிசையின் பெருந்தன்மையற்ற செயல்! pic.twitter.com/GcyMz5nB0B— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 4, 2018