கொரோனாவிற்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி; பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 77 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளது. புதிதாக பதிவான அனைத்து வழக்குகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பெறப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 10, 2020, 06:57 PM IST
கொரோனாவிற்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி; பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு title=

தமிழகத்தில் புதிதாக 77 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளது. புதிதாக பதிவான அனைத்து வழக்குகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பெறப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இன்று கண்டறியப்பட்டுள்ள புதிய வழக்குகளில் அனைத்து நோயாளிகளின் தொடர்பு அல்லது பயண வரலாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் கட்டுப்பாட்டுச் செயலுக்கு வெளியே எந்தவொரு வழக்குகளும் பதிவாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் புதிதான 77 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 77 பேரில் 72 பேர் பாதிக்கப்பட்டவர்களுடன்
தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த 73 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடுமையான தீவிர சுவாச நோய்த்தொற்று (SARI) நோயாளிகள் கண்காணிக்கப்படுவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவர்களில் 71 நோயாளிகளில் பரிசோதனை செய்யப்பட்டனர் எனவும், பரிசோதிக்கப்பட்டவர்களில் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐந்து முடிவுகள் நிலுவையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் முழு அடைப்பு நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியதற்கு, பிரதமர் மோடி உடனான வீடியோ கான்பரன்சிங் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர், இதுதொடர்பான முடிவை தமிழ அரசு தெரிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண பணிகள் குறித்து பேசிய அவர்.,  ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, 90 சதவீத அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநிலத்தவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

வறுமையில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் வீடுகளில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Trending News