5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; உறுதியான முடிவு இல்லை...

இந்த ஆண்டிலிருந்து ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என செய்திகள் வெளியானது உறுதியானது அல்ல என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 21, 2019, 12:48 PM IST
5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; உறுதியான முடிவு இல்லை... title=

இந்த ஆண்டிலிருந்து ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என செய்திகள் வெளியானது உறுதியானது அல்ல என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியாக நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று செய்திகளும் வெளியானது.

மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில்... “மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம். எனினும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி தான் அது பற்றி முடிவு எடுக்க உள்ளோம். மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Trending News