டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்!

500-டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அறிவித்துவிட்டு F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 31, 2023, 07:39 AM IST
  • பாட்டிலுக்கு ஒரு ரூபாய் தரவேண்டும்.
  • மீறினால் பணியிடை நீக்கம், பணிமாறுதல்.
  • டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் தலைவர் கண்டனம்.
டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்! title=

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் (கரூர் குரூப்) பாட்டிலுக்கு ஒரு ரூபாய் தரவேண்டும் நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம், மீறினால் பணியிடை நீக்கம், பணிமாறுதல் என மிரட்டுகின்றனர்.  500-டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அறிவித்துவிட்டு F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது, இதனால் டாஸ்மாக் ஊழியர் பாதிக்கப்பட்டாலும் அமைச்சர் செந்தில்பாலாஜி பயனடைவார்.  யார் ஊழலை கட்டுபடுத்த வேண்டுமோ அந்த அமைச்சர்களே, அதிகாரிகளே டாஸ்மார்க் பணியாளர்களை தவறு செய்ய தூண்டுகின்றனர், என பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் தலைவர் கண்டனம்.

மேலும் படிக்க | செந்தில்பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை: சிபிஐ விசாரணைகோரிய மனு தள்ளுபடி

சென்னை மேடவாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில பொது குழுக்கூட்டம் நடைப்பெற்றது, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 20-வருடங்களாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மீரட்டி மாமுல் வசூல் செய்யும் பார் உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பின்பு செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.நாகராஜன், இன்று 500-டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அரசு அறிவித்திருக்கிறார்கள், ஆனால் F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட தனியார் கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது, இதன் மூலம் 500-கோடி ரூபாய் ஆதாயம் அடைவார்கள். இதனால் டாஸ்மாக் ஊழியர் பாதிக்கப்பட்டாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பயனடைவார், என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் என்றும் அமைச்சருக்கு வேண்டியவர்கள் என்றும் (கரூர் குரூப்) அந்த குரூப் அனைத்து மதுபான கடைகளிலும் ஒரு பாட்டிலுக்கு 1-ரூபாய் வாங்கவேண்டும் மேற்கொண்டு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், அதை செய்ய மறுக்கும் ஊழியர்கள் பந்தாடப்படுவார்கள், பழிவாங்கப்படுகிறார்கள், இதை BMS சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

முதல்வர் இந்த துறையின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கா விட்டால் BMS சங்கம் போராட்டங்களை முன்னெடுக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மிக குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது, அவர்களுக்கு போதுமான சம்பளம், பணிநிரந்தரம், அரசு ஊழியருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படவேண்டும், இவைகளை தமிழக அரசு செய்ய மறுக்குமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார், கரூர் கம்பெனி கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம், பணிமாற்றம் செய்யப்படும் என மிரட்டப்படுகின்றனர், ஊழலை கட்டுபடுத்த வேண்டிய அதிகாரிகள், அமைச்சர்கள் ஊழியர்களை தவறு செய்ய தூண்டுகின்றனர் என தெரிவித்தார். இதை BMS சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் படிக்க | கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News