5ஆவது நாளாக தொடரும் சோதனை..செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்..!

Senthil Balaji IT Raid: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதையொட்டி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.  

Written by - Yuvashree | Last Updated : May 30, 2023, 03:40 PM IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 5ஆவது நாளாக சோதனை நடைப்பெற்று வருகிறது.
  • செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
  • அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5ஆவது நாளாக தொடரும் சோதனை..செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்..! title=

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சரும் திமுக கட்சியின் முக்கிய உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த சல தினங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 5ஆவது நாளாக தொடரும் இந்த சோதனையில், செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். 

5ஆவது நாளாக சோதனை:

கரூரில் பல்வேறு இடங்களில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை திமுகவினர் பலர் தடுத்து நிறுத்தியதால் சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் ஐந்தாவது நாளான இன்று அதே பகுதியில் அமைந்துள்ள அசோக்குமார் அலுவலகமான அப்பெக்ஸ் இன்பக்ஸ்-ல் இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | சென்னையில் திடீரென பேருந்துகள் நிறுத்தம்..! போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

அசோக்குமாருக்கு சம்மன்..!

அசோக் குமார் வீட்டில் சென்னை வருமான வரித்துறை உதவி இயக்குனர் நாகராஜ் அனுப்பிய சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இன்று காலை 10:30 மணிக்குள் அவரோ அல்லது அவர் சார்பாக பிரதிநிதி ஒருவர் சின்னாண்டாங் கோவில் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித்துறை பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அசோக்குமாரின் ஆடிட்டர் ஒருவர் ஆஜராகி கால அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் என்ன சொல்கிறார்? 

சில நாட்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். அப்போது திமுக கட்சி தொண்டர்கள் அவர்கள் வந்த கார் கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்களிடமிருந்தும் அரசியல் பிரமுகர்களிடமிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, இப்போது 5 நாட்களாக தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர்,  வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் வருமானவரித்துறையினர் திடீரென சோதனையிட வந்ததால் சில அசம்பாவித சம்பவபங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். 

சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு..

செந்தில் பாலாஜி, தன் தம்பி மனைவியின் பெயரில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி வருவதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு நடுவே தற்போது கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வீடு கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டில்தான் வருமான வரித்துறை அதிகாிகள் சோதனை மேற்கொண்டனர். இதை எல்லாம் தாண்டி சவுக்கு சங்கர் ஒரு பெரிய குற்றச்சாட்டை செந்தில் பாலாஜியின் மீது முன்வைத்துள்ளார். அதாவது, வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில், செந்தில் பாலாஜி தம்பியின் ரகசிய டைரி சிக்கியுள்ளதாகவும், அதில் கருப்பு பணம் குறித்த விவரங்கள் உள்ளதாகவும் அதனை வைத்து விசாரிக்க வருமான வரித்துறை சிறப்புக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்தார். 

மேலும் படிக்க | திரை விருந்துக்கு தயாரா மக்களே? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் & தொடர்களின் லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News