கரூர் மாவட்டம் தோகை மலையைச் சேர்ந்தவர் 65 வயதான சுப்பிரமணியன். நீண்ட தாடி நெற்றி நிறைய விபூதி என சன்னியாசி கோலத்தில் காட்சியளிக்கும் இவர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் யாசகம் பெற்று வருகிறார். கோயில் அருகேயும் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடங்களிலும் ஓய்வெடுத்து தனது வாழ்வை கழித்து வருகிறார்.
தனது 5 வயதில் தந்தையை இழந்து 15 வயதில் தாயை இழந்து வேதனை வாழ்க்கையை வாழ்ந்து வந்த சுப்ரமணியன் தனது பூர்வீக சொத்துக்களை விற்று அவரது சகோதரிக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார். பிறகு மன நிம்மதி தேடி நெல்லை மாவட்டம் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தஞ்சமடைந்தார். அன்றிலிருந்து யாசகம் பெற்று தனக்கான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் மீதி பணத்தைச் சேர்த்து வைத்து பொதுச் சேவைகளுக்காக செலவு செய்து வருகிறார். யாசகம் பெற்று கையில் வைத்திருக்கும் பணத்தை கொண்டு அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் பள்ளி செலவுக்கு கூட செலவுக்கு வருகிறார். முருகப்பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் அதே முருகனுக்காகத்தான் தற்போது யாசகம் பெறுவதில் முழு மூச்சாக இருக்கிறார்,
‘முருகனுக்கு’
புகழ்பெற்ற தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் ‘குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி’ திருக்கோயில் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். அக்கோயிலின் கட்டிடக்கலை வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளாக பல வெள்ளப்பெருக்கினையும் தாங்கி கம்பீரமாகக் காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கதவுகள் சேதமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அதனைச் செப்பனிடும் பணியை கோயில் நிர்வாகிகள் மேற்கொண்டபோது சுப்ரமணியன் தான் யாசகம் பெற்றுச் சேர்த்துவைத்த 75,000 மதிப்பிலான பணத்தில் புதிய கதவுகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இதுதவிர கோவிலில் உள்ள முன் மண்டபங்களுக்கான வர்ணம் பூசும் பணிக்கும் நன்கொடை வழங்கியுள்ளார். முருகப் பெருமான் மீது அலாதியான பிரியம் கொண்ட சுப்பிரமணியன் அடுத்தகட்ட முயற்சியாக குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விமானங்களுக்கு வர்ணம் பூசும் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு இப்படி ஒரு பரிசா? ‘சப்ரைஸ்’ கொடுத்த ஐடி நிறுவன உரிமையாளர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR