கட்சியை அசிங்கப்படுத்த இந்த வழக்கு தொடரப்பட்டது: ஸ்டாலின்!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

Last Updated : Dec 21, 2017, 11:53 AM IST
கட்சியை அசிங்கப்படுத்த இந்த வழக்கு தொடரப்பட்டது: ஸ்டாலின்! title=

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்பு வெளியான பிறகு சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,

2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி.

அரசியல் வரலாற்றில், ஒரு கட்சியை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஊடகங்கள் எவ்வாறு இந்த வழக்கு குறித்து செய்திகளை ஆர்வத்துடன் வெளியிட்டதோ அதே ஆர்வத்துடன் இந்த தீர்ப்பு குறித்தும், திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியிட வேண்டும். 

Trending News