MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... முழு விபரம் இதோ!

MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 17, 2022, 01:02 PM IST
  • 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் கலந்தாய்வு அட்டவணை.
  • MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.
  • 7.5 % இட ஒதுக்கீட்டில்
    558 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை பயில உள்ளனர்.
MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... முழு விபரம் இதோ! title=

MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். இது குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது... 

2022-23 ம் ஆண்டின் மருத்துவம் , பல் மருத்துவம் படிப்பிற்கு அரசு, சுயநிதி மருத்துவ இடங்கள், நிர்வாக மருத்துவ இடங்களுக்கான விண்ணப்பங்களில் மொத்தமாக 22,736 விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் 2695, விளையாட்டு பிரிவில் 216, முன்னாள் படைவீரர் பிரிவில் 356 விண்ணப்பங்கள் அடங்கும். 

சுயநிதி மருத்துவ கல்லூரி அரசு இடங்கள் 6067, பல் மருத்துவ இடங்கள் 1380. மேலும் 7.5 % ஒதுக்கீடில் சுயநிதி கல்லூரி இடங்கள் எம்பிபிஎஸ் 454 , பிடிஎஸ் 104 என மொத்தமாக இடங்கள் 558 அடங்கும். மருத்துவ கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி துவங்கும். முதல் நாள் விளையாட்டு, முன்னாள் படை வீரர் , மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வும், அன்று மாலையே சேர்க்கை அனுமதி வழங்கப்படும். பின்னர், 20 ஆம் தேதி அரசு சுயநிதி கல்லூரிகளில் அரசு இடங்களுக்கான 7.5 சதவீத இடத்திற்கான கலந்தாய்வும், அன்று மாலை 454 எம்பிபிஎஸ் 104 பிடிஎஸ் என 558 இடங்களுக்கான சேர்க்கை அனுமதி வழங்கப்படும். 

25 ம் தேதி வரை பொது பிரிவினருக்கான இணைய வழி கலந்தாய்வும், 21 முதல் 27 வரை சுய நிதி ஒதுக்கீட்டிற்கான இணைய வழி கலந்தாய்வும், 27 , 28 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடைபெறும்.

7.5 % உள் ஒதுக்கீட்டில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தேவதர்சினி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று, 518 மதிப்பெண் பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். 7.5 % இட ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு துறையின் சார்பில் வாழ்த்துகள். 7.5 % இட ஒதுக்கீட்டில் 558 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை பயில உள்ளனர். இவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணிணிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் படிக்க | ரேஷன் அரிசி விவகாரம்: 'அண்ணாமலை பேச்சைக்கேட்கும் ஒன்றிய அமைச்சர்' - சக்கரபாணி பதில்!

2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் கலந்தாய்வு அட்டவணை:

முதல் சுற்று:

19 ஆம் தேதி ( விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு ) சிறப்பு பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று மாலையை அவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். 

20 ஆம் தேதி - அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது, அன்றே மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். 

19-25 ஆம் தேதி பொது பிரிவினருக்கு இணைய வழி வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

21-27 ஆம் தேதி வரை சுயநிதி நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு இணையவழி வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

26 ஆம் தேதி முதல் சுற்று முடிவுகள் இணையவழியில் வெளியிடப்படும்.

27, 28 தேதிகளில் சான்றுகள் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

30 ஆம் தேதி முதல் சுற்று முடிவுகள் இணையவழியில் வெளியிட உள்ளனர். 

மாணவர்கள் முதல் சுற்று சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவர் குழுமம் 28.10.2022 நடைபெற உள்ளது. 

தமிழக அரசின் தேர்வு குழுமம்- 4.11.2022 ஆம் தேதி நடைபெற உள்ளது. 
இரண்டாவது சுற்று கலந்தாய்வு - 2.11.2022 முதல் 10.11.2022 வரை தேசிய மருத்துவ பிரிவினருக்கும், 7.11.2022 - 14.11.2022 வரை தமிழக அரசின் மாணவர்களுக்கு நடைபெறுகிறது. இரண்டாம் சுற்றில் முடிவுகள் - தேசிய மருத்துவ பிரிவினருக்கு 11.11. 2022 அன்றும் தமிழக அரசு மாணவர்களுக்கு 15.11. 2022 அன்றும் நடைபெற உள்ளது.

இரண்டாம் சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவ பிரிவினருக்கு 18 தேதியும் தமிழக அரசு மாணவர்கள் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதன்மை சுற்று தேசிய மருத்துவ பிரிவினருக்கு 23.11.2022 முதல் 1.12.2022 தேதி வரையிலும், தமிழக அரசு மாணவர்களுக்கு 6.12.2022 முதல் 12.12.2022 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
முழுமை சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மறுத்த பிரிவினருக்கு 10.12.2022 தமிழக அரசு மாணவர்களுக்கு 16.12.2022 நடைபெற உள்ளது.

விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதி சுற்று தேசிய மருத்துவ பிரிவுக்கு 12.12.2022 முதல் 14.12.2022 வரையும், தமிழக அரசு மாணவர்களுக்கு 17.12.2022 வரையும் நடைபெற உள்ளது. 

விடுபட்ட காலியிடங்களில் சேர்வதற்கு இறுதி நாள் 20.12.2022 அன்று தேசிய மருத்துவர் பிரிவினருக்கும், 20.12.2022 அன்று தமிழக அரசு மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.

2022-2023 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 15.11.2022 அன்று கல்லூரி தொடங்குகிறது. 

மேலும் படிக்க | ஆன்மிகத்தில் ஈடுபாடு இருப்பதுதான் திராவிட மாடல் - அமைச்சர் வேலு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News