ஆன்மிகத்தில் ஈடுபாடு இருப்பதுதான் திராவிட மாடல் - அமைச்சர் வேலு

ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 16, 2022, 07:18 PM IST
  • கள்ளக்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அமைச்சர் வேலு
  • அப்போது திராவிட மாடல் ஆட்சி குறித்து பேசினார்
  • ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு உள்ளதுதான் திராவிட மாடல் என்றார்
ஆன்மிகத்தில் ஈடுபாடு இருப்பதுதான் திராவிட மாடல் - அமைச்சர் வேலு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் பால் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மேலும் இயக்குனர்கள் என மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பதவியேற்பு விழா கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,  “எவர் வீடு கட்டினாலும், பால் காய்ச்சி அதன் பின்தான் குடியேறுவது தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது. வேளாண்மை தொழில்களுக்கு இன்றியமையாதது கால்நடைகள் ஆகும் கால்நடை வளர்ப்பில் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்ட கூடியது பால் உற்பத்தி. எனவே பால் உற்பத்தியில் மற்ற மாவட்டங்களை விட சிறப்பான உற்பத்தியில் முதலிடம் பெரும் வகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர் பெரும் பங்காற்றிட வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நாளொன்றுக்கு 1 லட்சத்து 73 ஆயிரம் லிட்டர் பாலினை 23,028 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 38 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து, பால் குளிரூட்டும் நிலையம் மூலமாகவும் 17 தொகுப்பு பால் குளிர்விக்கும் மையம் மூலவாகவும் குளிரூட்டப்பட்டு பதப்படுத்தி விற்பனைக்காக 3,000 லிட்டர் உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள பால் இணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை 18 முகவர்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | அனைத்து மொழிகளுக்கும் குரல் கொடுப்போம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

அனைத்து வளர்ச்சி பணிகளும் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகம் விரைவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும், ஆட்சியரும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, இந்து சமய அறநிலைத்துறை தற்பொழுது பால்வளத்துறை உள்ளீட்டதுறை அலுவலகங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது

நான் அமைச்சர் பதவியேற்ற உடனேயே முதலில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, அறநிலையத் துறையை பிரித்து, இம்மாவட்டத்திற்கு கொண்டு வந்தேன். ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு கொண்டிருப்பதால்தான் அறநிலையத்துறை மூலம் அந்தந்த கிராமப் பகுதியிலுள்ள கோயில்கள் புனரமைக்கப்பட்டு சீர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திராடவிட மாடல் ஆட்சியும் ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சிதான் ” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News